
ஒரு நாள் கனவு நினைவாகுமே
அது நாள் வரைக்கும் உயிர் பெறுமே
கனவுகள் எல்லாம் மெய்ப்படுமே
கடவுளின் அருளும் துணைவருமே
முயற்சி என்பது நம் வசமே
வாழ்க்கை முறை தான் உயர உயர
ஒழுக்கம் என்பது வாழ்க்கையின் நெறியாக
உயர்ந்தவரெல்லாம் கடந்து வந்த பாதை
அதை நீ அறிந்தால் உதித்திடும் நம்பிக்கை
நல்லதை நீ தான் செய்திட வேண்டும்
நல்லதை நீ தான் நினைத்திடவேண்டும்
நினைத்ததுயெல்லாம் நடந்திடும் உன் வழியில்
வாழ்க்கையில் நடப்பது எல்லாம் அனுபவமே
அதை ஏற்று கொண்டால் உனக்கு வெற்றி நிச்சயமே
நேரம் என்பது பெருஞ்செல்வம்
அதில் ஆக்கம் செய்வது உன் சாமர்த்தியம்
இலக்கு என்பது தெளிவானால் பயணம் என்பது இனிதாகும்
செயலில் நீ தான் இறங்கிடும் முன்னே
அதை ஆய்வுச்செய்து அறிந்திடும்கணமே
மனதில் உறுதி பிறந்திடும் உனக்கு
அது அழைத்துச்செல்லும் வெற்றியின் சன்னதிக்கு
