
அந்த காலத்தில் கிராமத்தில் நடக்கும் கல்யாணம், புதுமனை புகுவிழா, சுபகாரியங்களுக்கு போய் இருந்திங்கனா, சாப்பிட்டு கை கழுவ ஒரு அண்டா அல்லது தவளையில் தண்ணி புடிச்சி, சொம்பு வச்சியிருப்பாங்க.
நகரங்களில் பெரும்பாலான இடங்களில் குழாய் இருக்கும். வலப்பக்கம் திருப்பினா தண்ணி வரும் இடப்பக்கம் திருப்பினா நிற்கும். மிக எளிய முறை.
அதுக்கு அப்புறம் தண்ணி மிச்சம் பன்னுறதுக்கு வந்தது ஸ்ப்ரிங் குழாய் (Spring Tap/Waste Not Water Tap/Jaison Water Tap). ரயில்வே ஸ்டேஷனில் அதிகமா பார்க்கலாம். இதை உருவாக்கிவர் கேரளாவின் சுப்பிரமணிய ஐயர். இதற்கு காப்புரிமையும் பெற்றார். குழாயின் முனையை தூக்கினால் தண்ணி வரும், விட்டால் நிற்கும். சில குழாய் கடினமா இருக்கும், சமயத்தில தண்ணி பீச்சி மேலே அடிக்கும்.
இன்னிக்கி தொழில் வளர்ச்சியால், தானியங்கி குழாய் (automatic tap) பெரிய ஹோட்டல், மாலில் வந்துடுச்சி. சாப்பாடு நல்லா இருக்குதோ இல்லையோ ஹோட்டல் உள்கட்டமைப்பு மட்டும் ஆடம்பரமா இருக்கும். அதிலும் குழாய் நவீனமயமாய் இருக்கும். இதுல பல வசதிகளும் இருக்கு, கஷ்டங்களும் இருக்கு.
கை நீட்டினா தண்ணி வரும், அப்புறம் கொஞ்ச நேரத்தில் நின்னுடும். ஆனால் இன்னும் தண்ணி வேணும்னா கையை எடுத்து திருப்பி நீட்டனும். அப்படியும் தண்ணி வரலேன்னா சென்சார் தேடணும், கைய எல்லா பக்கமும் காட்டணும். இதுல சென்சார் சரியா வேலை செய்லேன்னா இன்னும் கஷ்டம்.
சில குழாயில குமிழ் (knob) இருக்கும். அத மேலயா, கீழையா, வலதா, இடதா எந்த பக்கம் திருப்புனம் தெரியாது.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி காஞ்சிபுரம் போயிருந்தேன். அங்க ஒரு ஹோட்டலில் பிரஸ் ஒன்ஸ் குழாய் (press once tap) இருந்தது. ஏற்கனேவே பார்த்ததனால் கை கழுவியாச்சு. ஒரு வாலிபன், அவனுக்கு புதுசு போல ரொம்ப நேரமா அழுத்தி அழுத்தி பார்த்தான் தண்ணி நிக்கல, பொறுமை இழந்து, தண்ணிய எப்படி நிறுத்தணும் தெரியலையே புலம்பினான். தம்பி, குழாய அழுத்தாத, தண்ணி தானா நிற்கும், சொன்னதுக்கப்புறம் போனான். என்ன கொடும சரவணன்
இதுக்குனே குழாய எப்படி யூஸ் பண்ணனும் எழுதி ஓட்டணும்.
எந்த ஒரு தொழில் நுட்பமும் ஆடம்பரமா இருந்தா மட்டும் போதாது, எல்லா மக்களும் சின்னவங்க முதல் பெரியவங்க வரை யூஸ் பண்ற மாறி எளிய முறையில் இருக்கனும். அதே சமயம் தண்ணிய, காச மிச்சப்படுத்தனும்.
நன்றி
விஜயகுமார்








